'தங்கலான்' திரைப்பட KGF செட்யூல் நிறைவு – இயக்குனர் அறிவிப்பு.!

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்து வரும் 'தங்கலான்' படத்துக்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சியான் விக்ரம் 'கேஜிஎஃப்'

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்து வரும் ‘தங்கலான்’ படத்துக்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சியான் விக்ரம் ‘கேஜிஎஃப்’ படப்பிடிப்பில் இருந்து சில புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டு,  தனது ‘தங்கலான்’ பா.ரஞ்சித்தை பாராட்டியுள்ளார்.

படக்குழு திட்டமிடப்பட்ட இந்த செட்யூல் முடிவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பா.ரஞ்சித், ‘தங்கலான்’ படத்தின் 80% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும். படத்தை இந்த ஆண்டின் இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

unknown node

நேற்று சியான் விக்ரம் சென்னை திரும்பியபோது விமான நிலையத்தில் காணப்பட்டார், அவர் தனது ‘தங்கலான்’ பட புதிய தோற்றத்தில் ஸ்டைலாக இருந்தார்.

unknown node

இதற்கிடையில், விக்ரம் நடித்துள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதைப்போல அவர் நடித்துள்ள துருவ நட்சத்திரம் திரைப்படமும் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘தங்கலான்’ படத்தில் நடிகை மாளவிகா மோகனன், பார்வதி திருவோத்து, பசுபதி மற்றும் பலர் நடித்துள்ளனர், மேலும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.