இந்த வாரம் உங்களோடது... களத்திற்கு தயாரான முன்னணி நாயகிகள்...!

நாளை டிசம்பர் 4-ஆம் தேதி முன்னணி நடிகைகள் பலர் நடித்துள்ள படங்கள் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. வழக்கமாக ஹீரோக்கள் நடிக்கும் படங்கள் தான் போட்டிக்கு வரும்

நாளை டிசம்பர் 4-ஆம் தேதி முன்னணி நடிகைகள் பலர் நடித்துள்ள படங்கள் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. வழக்கமாக ஹீரோக்கள் நடிக்கும் படங்கள் தான் போட்டிக்கு வரும் ஆனால், இந்த வாரம் முன்னணி கதாபாத்திரங்களில்  நடிகைகள் நடித்துள்ள படங்கள் வெளியாகவுள்ளது.

ராங்கி – த்ரிஷா

unknown node

RAANGI [Image Source; Google]

நடிகை த்ரிஷா நடிப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்ட திரைப்படம் ‘ராங்கி’. இந்த படத்தின் கதையை பிரபல இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் தான் எழுதியிருக்கிறார். படத்தை அவருடைய உதவி இயக்குனரான எம்.சரவணன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட படத்தின் டிரைலர் வெளியாகி இருந்தது. டிரைலரை பார்க்கையில் படம் கண்டிப்பாக வசூல் ரீதியாக வெற்றிபெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

செம்பி – கோவை சரளா

unknown node

Sembi [Image Source: Twitter ]

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் நடிகை கோவை சரளா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள “செம்பி”.வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இந்த திரைப்படமும் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் மீதும் பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது.

இதையும் படியுங்களேன்-அட நம்ம ஐஸ்வர்யா ராஜேஷா இது..? வைரலாகும் அட்டகாசமான புகைப்படங்கள்.!

டிரைவர் ஜமுனா – ஐஸ்வர்யா ராஜேஷ்

unknown node

Driver Jamuna [Image Source: Twitter ]

இயக்குனரை கிங்சிலின் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள “டிரைவர் ஜமுனா” திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பே வெளியாகவிருந்த இந்த திரைப்படம் சில காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளி சென்றது. இறுதியாக படம் நாளை வெளியாகிறது.

ஓ மை கோஸ்ட் -சன்னிலியோன்

unknown node

Oh My Ghost [Image Source: Twitter ]

இயக்குனர் ஆர்.யுவன் இயக்கத்தில் நடிகை சன்னிலியோன், சதீஷ், தர்ஷா குப்தா, ஜிபிமுத்து ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள த்ரில்லர் திரைப்படமான ” ஓ மை கோஸ்ட்” நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தில் சன்னிலியோன் நடித்துள்ளதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

நாளை இந்த 4 திரைப்படங்கள் வெளியாகவுள்ளதால் சினிமா ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். இந்த படங்களில் எந்த படங்கள் அதிகம் வசூல் செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மேலும் நீங்கள் இந்த 4 படங்களில் எந்த படத்திற்கு செல்லப்போகிறீர்கள் என்பதை கீழே உள்ள கருத்தில் பதிவிடுங்கள்.