11 ஆண்டுகளுக்கு பிறகு விஜய்க்கு ஜோடியாகும் தமன்னா...?

It has been reported that actress Tamanna will act opposite Vijay in the film thalapathy 65.

தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை தமன்னா நடிக்கவுள்ளதாக தகவல்.

தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தி என்று அழைக்கப்படும் விஜய் தற்போது மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க பல நடிகைகளின் பெயர் அடிபட்டது அந்த வகையில், ராஷ்மிகா, பூஜா ஹெக்டே, கியாரா அத்வானி, ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடந்த பட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை தமன்னா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகை தமன்னா விஜய்க்கு ஜோடியாக சுறா படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.