தல பட இயக்குனருடன் கைகோர்க்கும் சூர்யா..?

Actor Surya is reportedly set to star in a film directed by director Siruthai Siva

நடிகர் சூர்யா இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக தகவல்

நடிகர் சூர்யா தற்போது சூரரைப்போற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தாக இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் தனது 40 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து அருவா, மற்றும் வாடிவாசல் ஆகிய இரண்டு திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் அருவா படத்தில் அடுத்ததாக நடிக்க வாய்ப்பில்லை ஏனெனில் இயக்குனர் ஹரி நடிகர் அருண் விஜய்யை வைத்து திரைப்படம் இயக்கி வருவதால் இந்த படத்தை முடித்து விட்டு அடுத்ததாக அருவா படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அதைபோல் வாடிவாசல் படத்தை இயக்குனர் வெற்றி மாறன் நடிகர் சூரியை வைத்து ஒரு படம் இயக்கி வருவதால் அடுத்ததாக வாடி வாசல் படத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது நடிகர் சூர்யா இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. மேலும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தல பட இயக்குனருடன் கைகோர்க்கும் சூர்யா..?