மீண்டும் இணையும் சூர்யா-ஹரி கூட்டணி !!கொண்டாட்டத்தில் ரசிகர்கள் !!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் மிக சிறந்த நடிகராக வலம் வருகிறார். இவர் வெவ்வேறு விதமான கதாபாத்திரங்களை தேர்ந்துதெடுத்து நடிப்பதில் ஆர்வம் உடையவர்.

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் மிக சிறந்த நடிகராக வலம் வருகிறார். இவர் வெவ்வேறு விதமான கதாபாத்திரங்களை தேர்ந்துதெடுத்து நடிப்பதில் ஆர்வம் உடையவர்.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தற்போது ‘என்.ஜி.கே.’ படம் தயாராகி வருகிறது.மேலும் இந்த படத்தில்  ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி முதலிய நடிகைகள்  நடித்துள்ளனர். தற்போது படத்தின்  படப்பிடிப்பு வேலைகள் முடிந்தது.

நடிகர் சூர்யா ‘என்.ஜி.கே.’ படத்தைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘காப்பான்’ படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்தில் சயிஷா சைகல் ஹீரோயினாக நடிக்கிறார். ‘காப்பான்’ படத்திற்கு பிறகு சுதா கொங்கரா இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் இயக்குனர் ஹரியுடன் ஏற்கனவே ஐந்து படங்களில் நடிகர் சூர்யா  நடித்து வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் ஆறாவது முறையாக  இயக்குநர் ஹரி இயக்கும்’ யானை ‘ படத்தில் நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

மீண்டும் இணையும் சூர்யா-ஹரி கூட்டணி !!கொண்டாட்டத்தில் ரசிகர்கள் !!