பூஜையுடன் தொடங்கப்பட்ட சூர்யா 40 படப்பிடிப்பு..!

Filming for Surya's 40th film has started today with Pooja. This has given Surya fans a lot of excitement right now.

சூர்யாவின் 40 வது திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இது சூர்யா ரசிகர்களுக்கு தற்போது உற்சாகத்தை அளித்துள்ளது.

நடிகர் சூர்யா தற்போது சூரரைப்போற்று திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 40 வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். மேலும் நடிகர் சத்யராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இது சூர்யா ரசிகர்களுக்கு தற்போது உற்சாகத்தை அளித்துள்ளது. மேலும் ட்வீட்டரில் Suriya40 என்ற ஹாஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் படத்திற்கான டைட்டில் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.