நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்பார்கப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் சூர்யா நடிக்கவுள்ள 43 படத்திற்கான சில தகவல்கள் சமீப காலமாக பரவி படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறது.
விரைவில் இயக்குனர் சுதா கொங்கராவின் தனது ‘சூர்யா 43’ படத்திற்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. தனது கைவரிசையில் பல்வேறு சுவாரஸ்யமான படங்களை வைத்திருக்கிறார். சமீபத்திய தகவலின் படி, சூர்யா ஒரு புதிய பிரம்மாண்டமான திட்டத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கவுள்ளதாக பேச்சுக்கள் அடிபடுகிறது.
அந்த திட்டத்திற்காக பிரபல பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ராவுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உண்மை என்று நிரூபிக்கும் வகையில், ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ராவை சந்தித்த சூர்யாவின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
unknown nodeSuriya – Rakeysh Omprakash
இவர்கள் இருவரும் இணையும் இந்த கூட்டணியில், மஹாபாரதத்தில் வரும் கர்ணன் கதாபாத்திரத்தை மையமாக கொண்ட கதையாக இருக்கலாம் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ‘கர்ணன்’ மிகப்பெரிய பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக உருவாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் படப்பிடிப்பு 2024 ஆம் ஆண்டு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மகாபாரத காலகட்டத்தை மையமாக வைத்து சூர்யா ‘கர்ணன்’ என்ற டைட்டில் ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது.
unknown node