திஷா பதானி பக்கத்தில் உட்கார தயங்கிய சூர்யா! ஜோதிகா போட்ட கண்டிஷனா?

கங்குவா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் போது திஷா பதானியுடன் சூர்யா அமர மறுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

suriya jyothika

டெல்லி : ஜென்டில்மேன் என்கிற பெயருக்குப் பொருத்தமானவர் என்றால் சூர்யா தான் என அவருடைய ரசிகர்கள் அவருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறார்கள். அதற்கு முக்கியமான காரணமே, கங்குவா படத்தின் ப்ரோமோஷனுக்காக கலந்து கொண்ட நிகழ்ச்சியில் சூர்யா செய்த விஷயம் தான். படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் டெல்லியில் நடைபெற்றது.

இந்த விழாவில் சூர்யா, திஷா பதானி, சிறுத்தை சிவா, பாபி தியோல் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்கள். அப்போது விழாவில் பேசி முடித்த பிறகு சூர்யா வேகமாக நாற்காலியில் சென்று அமரப் போனார். அப்போது பாபி தியோல் இந்த சேரில் அமருங்கள் என்பது போலக் கூறினார். அதற்கு சூர்யா நடிகை பக்கமா? என்பது போல யோசித்தார்.

பிறகு பாபி தியோல் அமர்ந்து இடத்தை அவரிடம் கேட்டு நான் இங்கு அமர்ந்து கொள்கிறேன் நீங்கள் அங்கு அமருங்கள் எனக் கூறினார். சூர்யா சொன்னதைக் கேட்டுவிட்டு பாபி தியோல் எழுந்து திஷா பதானி பக்கத்தில் அமர்ந்திருந்த சேரில் அமர்ந்தார். அதன்பிறகு பாபி தியோல் அமர்ந்திருந்த இடத்தில் சூர்யா அமர்ந்தார்.

நடிகை பக்கத்தில் உட்கார சூர்யா மறுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், வீடியோவை பார்த்த அவருடைய ரசிகர்கள் நீங்கள் பக்கா ஜென்டில்மேன் என பாராட்டி வருகிறார்கள். மேலும், சிலர் நடிகைகள் கிட்ட உட்காரக் கூடாது என அண்ணி ஜோதிகா கண்டிஷன் போட்டு இருப்பார் போல எனவும் கூறி வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்