நிஷாவை "வேஷம்" என்ற சுரேஷ் சக்கரவர்த்தி.!

Suresh Chakraborty, who left the Big Boss house, has posted a single word about Nisha saying that she is a Vesham .

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுரேஷ் சக்கரவர்த்தி நிஷா குறித்து ஒரே வார்த்தையில் வேஷம் என்று கூறிய பதிவிட்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியானது 16 போட்டியாளர்களுடன் ஆரம்பித்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது . அதிலிருந்து முதல் வாரத்தில் ரேகா வெளியேற வைல்ட் கார்ட் என்ட்ரியாக அர்ச்சனா வீட்டிற்குள் நுழைந்தார்.அதனையடுத்து இரண்டாம் வாரத்தில் வேல் முருகன் வெளியேற சுசித்ரா செக்கன்ட் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்தார் . இதனையடுத்து சிறப்பாக விளையாடிய சுரேஷ் சக்கரவர்த்தி யாரும் எதிர்பாராத விதமாக பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் . தொடர்ந்து கடந்த வாரம் சுசித்ரா வீட்டிலிருந்து வெளியேறினார்.

சண்டை , சச்சரவுகள்,அழுகை , சந்தோசம் என அனைத்து உணர்வுகளையும் பிரிதிபலிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் குரூபிஸம் உள்ளதாக கூறப்படுகிறது .சிலர் வீட்டினுள் விளையாடாமலே தங்கள் வேவலையை மட்டுமே பார்த்து கொண்டு உள்ளனர் .அந்த வகையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுரேஷ் சக்கரவர்த்தி நிஷா குறித்து ஒரே வார்த்தையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் .

ஏற்கனவே நிஷா குறித்து சுச்சி , சுரேஷ் ஆகியோர் நெகட்டிவ் கமெண்ட்களை மட்டுமே கூறியிருந்தனர் .நேற்றைய எபிசோடில் கூட கமல்ஹாசன் நிஷாவிடம் தனியாக உங்களுக்காக விளையாடுங்கள் என்று நிஷாவுக்கு அறிவுரை என்ற பெயரில் டிப்ஸ் வழங்கியிருந்தார்.இந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களை குறித்து கருத்துகளை தெரிவித்து வரும் சுரேஷ் சக்கரவர்த்தி தற்போது நிஷா குறித்து ஒரே வார்த்தையில் ‘நிஷா ..வேஷம்’ என்று கூறி விமர்சித்துள்ளார் . இதற்கு நெட்டிசன்கள் பலர் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

unknown node