லைகா நிறுவனத்தின் 2 புதிய திரைப்படங்களில் நடிக்க, நடிகர் ரஜினிகாந்த் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் தற்பொழுது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு மே மாதம் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
unknown nodeஇந்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக நம்ப தக்க சினிமாவட்டத்தில் சொல்லப்படுகிறது. ஏனெனில், லைக்கா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ்கரண் சமீபத்தில் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார்.
unknown nodeசந்தித்து இரண்டு படங்களில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றதவும், தற்போது ரஜினி அதற்கு சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. மேலும் இந்த இரண்டு படங்களுக்கான பூஜை வரும் நவம்பர் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இதையும் படியுங்களேன்-இது என்னமா டிரஸ்.? கண்ணைப்பறிக்கும் உடையில் அதிதி சங்கர்.! லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ…
unknown nodeலைக்கா நிறுவனம் தயாரிக்கும் அந்த இரண்டு படங்களில் ஒரு திரைப்படத்தை ரஜினிகாந்தின் மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ளதாகவும் அந்த படத்தில் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ளாராம். மற்றோரு படத்தை டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.