சந்திரமுகி 2-ம் பாகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி..? இயக்குனர் பி.வாசு விளக்கம்.!

சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் ரஜினிகாந்த் நடிக்கவில்லை என்று இயக்குனர் பி.வாசு விளக்கம் அளித்துள்ளார்.

சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் ரஜினிகாந்த் நடிக்கவில்லை என்று இயக்குனர் பி.வாசு விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த 2005 – ஆம் ஆண்டு இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. இந்த திரைப்படத்தில் நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு,பிரபு, விஜயகுமார், நாசர்,வினீத் ராதாகிருஷ்ணன், சோனு சூட், போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் வித்தியாசாகர் இசையமைத்திருந்தார்.

unknown node

இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில், பலத்த வரவேற்பை பெற்று மாபெரும் வசூல் சாதனை செய்தது, குறிப்பாக கடத்த 1999 ஆம் ஆண்டு வெளியான படையப்பா பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. அதைப்போல் திரையரங்குகளில் அதிகம் ஓடிய படம் என்ற சாதனையும் படைத்தது.

இந்த திரைப்படத்தின் 2-ம் பாகம் உருவாகுவதாகவும், படத்தை இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகாக நடிப்பார் என்றும் சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து, ரஜினி நடத்த வேட்டையன் ராஜா கதாபாத்திரத்தில் நடிகர் ராகவலாரன்ஸ் நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகி பரவி வந்த நிலையில், இதற்கு இயக்குனர் பி.வாசு விளக்கம் அளித்துள்ளார்.

unknown node

இது குறித்து சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இயக்குனர் பி.வாசு  கூறியது ” சந்திரமுகி முதல் பாகத்தில் நடித்தவர்கள் இரண்டாம் பாகத்தில் கிடையாது. முதல் பாகத்தில் முக்கிய சம்பவம் நடந்திருக்கும் அதைபோல் தான் இரண்டாம் பாகத்திலும் ஒரு முக்கிய சம்பவம் உள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவில்லை. படத்தில் ராகவ லரான்ஸ் நடிக்கவுள்ளார். தற்போது நடித்துவரும் ருத்ரன் படத்தை முடித்துவிட்டு சந்திரமுகி 2 பாகத்தில் இணைவார்” என்று கூறியுள்ளார்.