சூப்பர் ஸ்டார் காலில் விழுந்த மாதவன்.. ரஜினி செய்த நெகிழ்ச்சி சம்பவம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது படங்களில் நடிப்பதோடு மட்டுமின்றி, தமிழில் வெளியாகும் நல்ல படங்களை பார்த்துவிட்டு படக்குழுவினரை நேரில் அழைத்து, அல்லது போனில்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது படங்களில் நடிப்பதோடு மட்டுமின்றி, தமிழில் வெளியாகும் நல்ல படங்களை பார்த்துவிட்டு படக்குழுவினரை நேரில் அழைத்து, அல்லது போனில் தொடர்பு கொண்டு பாராட்டி விடுவார்.

unknown node

குறிப்பாக சமீபத்தில் வெளியான டாணாக்காரன், டான்,  ராக்கெட்ரி, மாமனிதன், இரவின் நிழல் ஆகிய படங்களை பார்த்துவிட்டு தொலைபேசி வாயிலாகவும், சமூக வலைதளத்தின் மூலமும்  பாராட்டியிருந்தார்.

unknown node

அந்த வகையில், மாதவன் இயக்கத்திலும், நடிப்பிலும் வெளியான “ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்” படத்தை பார்த்துவிட்டு மாதவனையும், இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனையும் தனது இல்லத்திற்கு அழைத்து பாராட்டியுள்ளார். இதற்கு முன்பு டிவிட்டரில் அறிக்கை ஒன்றையும் வெளியீட்டு பாராட்டி இருந்தார்.

unknown node

இந்த படம் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் . படத்தை பார்த்து விட்டு இவர்கள் இருவரையும் நேரில் அழைத்து பாராட்டியதோடு மட்டுமில்லாமல் இருவருக்கும் பொன்னாடையும் போர்த்தி மகிழ்வித்துள்ளார் ரஜினிகாந்த்.

unknown node

பிறகு ரஜினி மாதவனுக்கு பொன்னாடை போர்த்தியவுடன் மாதவன் ரஜினி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.