சூப்பர் ஸ்டார் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய லாரன்ஸ்! காரணம் என்ன தெரியுமா.?

கடந்த 2005-ஆம் ஆண்டு இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் வெளியான திகில் திரைப்படம் "சந்திரமுகி ". இந்த படத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா போன்ற பலர்

கடந்த 2005-ஆம் ஆண்டு இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் வெளியான திகில் திரைப்படம் “சந்திரமுகி “. இந்த படத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

unknown node

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது . இந்த படத்தையும் இயக்குனர் பி.வாசு தன இயக்குகிறார். இதில் நடன இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் , வடிவேலு ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்கள்.

unknown node

படத்திற்கு இசையமைப்பாளர் கீரவாணி இசையமைக்க, படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. முதல் பாகத்தை போலவே இரண்டாவது பாகத்தையும் சிறப்பாக எடுக்க படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது.

unknown node

இந்த நிலையில், சந்திரமுகி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று மைசூரில் தொடங்கியுள்ள நிலையில், ராகவா லாரன்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

unknown node