கார்த்தி ரசிகர்களுக்கு இன்று காத்திருக்கும் சூப்பர் அப்டேட்..!!

The trailer of the movie Sultan starring Karthi will be released today at 5 pm.

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது.

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திலிருந்து வெளியான டீசர், பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதை தொடர்ந்து. அடுத்ததாக படத்திற்கான டிரைலரை படக்குழுவினர் வெளியீட திட்டமிட்டுள்ளனர். அதன் படி இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. இதனால் கார்த்தி ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்துள்ளார்கள்.

இயக்குனர் பாக்கிய ராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் யோகி பாபு, நெப்போலியன், ராமச்சந்திரன் ராஜூ, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் விவேக் மெர்வின் இசையமைத்துள்ள இந்த படத்தை எஸ் ஆர் பிரபு தயாரிக்கிறார்.