சூர்யா 42 படத்தின் சூப்பர் அப்டேட்.! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் திரைப்படம் "சூர்யா 42". இந்தப் படத்தைத் யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ க்ரீன் இணைந்து

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் திரைப்படம் “சூர்யா 42”. இந்தப் படத்தைத் யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ க்ரீன் இணைந்து தயாரிக்கிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஶ்ரீபிரசாத் இசையமைத்து வருகிறார்.

unknown node

படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை திஷா பதானி நடிக்கிறார். யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா மற்றும் ஆனந்த் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் கோவாவில் தொடங்கப்படவுள்ளது.

இதையும் படியுங்களேன்-வாவ் 40 வயசுல இப்படி ஒரு அழகா.. டாப் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் புன்னகை அரசி சினேகா.!

unknown node

இந்த நிலையில், படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான யுவி கிரியேஷன்ஸ் ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.

unknown node

மேலும் சூர்யா 42 திரைப்படம் 10 மொழிகளில் இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. இதுயெல்லாம் உண்மையா இல்லையா என்பதை நாளை வெளியாகும் அப்டேட்டை பொறுத்து பார்க்கலாம். வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவாளராகவும், மிலன் கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். சண்டை இயக்குனராக சுப்ரீம் சுந்தர் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.