ராகவா லாரன்ஸ் ரசிகர்களுக்கு ருத்ரன் பட குறித்த மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகரும், இயக்குனரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அடுத்ததாக ருத்ரன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அவரே இப்படத்தை இயக்கியுள்ளார். படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் படத்திற்கு இசையமைப்பளார் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதனையடுத்து, தற்போது ருத்ரன் படத்தின் புதிய அப்டேட் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் பைவ் ஸ்டார் தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இதனால் ராகவலாரன்ஸ் ரசிகர்கள் எதிர்பார்புடன் காத்துள்ளனர்.
unknown node