கார்த்தி ரசிகர்களுக்கு வெளியான வெறித்தனமான அப்டேட்..!!

Filming for actor Karthi's 22nd film is set to start on April 26.

நடிகர் கார்த்தியின் 22 வது படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் 26 ஆம் தேதி தொடங்கவுள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி முன்னணி நடிகராக வலம் வருகிறார். தற்போது இவர் பாக்கிய ராஜ் கண்ணன் இயக்கத்தில் சுல்தான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த 2 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்நது இயக்குனர் மணி ரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பை முடித்து விடுவார்.

இந்த நிலையில் அடுத்ததாக நடிகர் கார்த்தியின் 22 வது படத்தை இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களை இயக்கிய பி எஸ் மித்ரன் இயக்கவுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் நடிகர் கார்த்தி இரட்டை கதாபாத்திரத்தில் நடக்கவுள்ளதாகவும், படம் மிகவும் த்ரில்லராக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் இந்த திரைப்படத்திற்கான வருகின்ற ஏப்ரல் 26 ஆம் தேதி தொடங்கவுள்ளது.