'குக் வித் கோமாளி' ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.!இந்த வாரம் கலாட்டாவிற்கு பஞ்சமே இல்ல போலயே.!

Season 1 celebrities Vanitha Vijayakumar, Ramya Pandian, Uma Riyaz and Rekha are all set to compete in the Cook With Comali show this week.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் சீசன் 1 பிரபலங்களான வனிதா விஜயகுமார்,ரம்யா பாண்டியன்,உமா ரியாஸ்,ரேகா ஆகியோர் கலந்து கொண்டு போட்டியிட உள்ளனர்.

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சியில் ஒன்று குக் வித் கோமாளி .பலரையும் சிரிக்க வைத்து பிக்பாஸை விட அதிகம் பார்வையாளர்களை கவர்ந்துள்ள ஷோ குக் வித் கோமாளி தான் .ஒரு சமையல் நிகழ்ச்சியை இவ்வளவு என்டர்டெயின்மென்டாக கொண்டு செல்வதாலையே இதற்கு ரசிகர்கள் அதிகம் .எப்படா சனி மற்றும் ஞாயிறு வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்க்கலாம் என்று பலர் கிடையாய் கிடக்கின்றனர்.

இந்த நிலையில் இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சீசன் 1 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.ஆம் இந்த வாரம் செலிபிரேஷன் ரவுண்ட் என்பதால் ஏற்கனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து பிரபலமான வனிதா விஜயகுமார்,ரம்யா பாண்டியன்,உமா ரியாஸ்,ரேகா ஆகியோர் வருகை தந்துள்ளனர்.எனவே இந்த வாரம் சீசன் 1 மற்றும் சீசன் 2 போட்டியாளர்கள் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது ரசிகர்களைடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

unknown node