சுல்தான் படத்தின் 3 வது பாடலான ‘எப்படி இருந்த நாங்க’ என்ற பாடல் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாகவுள்ளது.
இயக்குனர் பாக்கிய ராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் யோகி பாபு,லால் , நெப்போலியன், ராமச்சந்திரன் ராஜூ, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கான புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த படத்திலிருந்த இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இன்று மாலை 5.30 மணிக்கு இந்த படத்தில் இடம்பெற்றுள்ள “எப்படி இருந்த நாங்க” என்ற பாடல் வெளியாகவுள்ளது.இந்த பாடலை அந்தோனி தாசன் பாட விவேகா வரிகள் எழுதியதும் , அதற்கு விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
unknown node