கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்திலிருந்து சில புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் பாக்கிய ராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தமிழில் இவருக்கு இதுதான் முதல் திரைப்படம் ஆகும். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் யோகி பாபு, ராமச்சந்திரன், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்த படத்திற்கான பர்ஸ்ட் சிங்கிள் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ள நிலையில் தற்போது சுல்தான் படத்திலிருந்து ஒரு சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.அந்த புகைப்படங்களை கார்த்தி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.
unknown nodeunknown node