அசுரன் படத்திற்கு இணையாக வசூல் செய்த சுல்தான்..??

The monster movie and the movie Sultan have collected 55 lakhs in Chennai on the first day of its release

அசுரன் திரைப்படமும் சுல்தான் திரைப்படமும் வெளியான முதல் நாளில் சென்னையில் 55 லட்சம் வசூல் செய்துள்ளது.

கடந்த 2 ஆம் தேதி நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் சுல்தான். இந்த திரைப்படத்தை இயக்குனர் பாக்கிய ராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். மேலும் எஸ் ஆர் பிரபு தயாரித்துள்ளார். படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் விவேக் மெர்வின் பாடலுக்கு இசையமைக்க பின்னணி இசையை இசையமைப்பாளர் யுவன் இசையமைத்திருந்தார்.

விவசாயம் குறித்து உருவாகியுள்ள இந்த திரைப்படம் வெளியான நாளில் இருந்த தற்போது வரை ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் செய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது வெளியான முதல் நாளில் சென்னையில் மட்டும் இந்த திரைப்படம் 55 லட்சம் வசூல் செய்துள்ளது. இதை போல் இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படமும் வெளியான முதல் நாளில் சென்னையில் 55 லட்சம் தான் வசூல் செய்துள்ளது.

மேலும் நாளிற்கு நாள் சுல்தான் திரைப்படத்தின் வசூல் அதிகரித்து வருவதால் அசுரன் படத்தின் வசூலை பின்னுக்கு தள்ளுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இதுவரை உலகம் முழுவதும் சுல்தான் திரைப்படம் 12 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.