கைதி திரைப்படத்தின் வசூல் சாதனையை முறியடித்த சுல்தான்..!!

It is said that the movie Sultan has collected 18.19 crores in Tamil Nadu alone in 5 days

சுல்தான் திரைப்படம் வெளியான 5 நாட்களில் தமிழகத்தில் மட்டும் 18.19கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் சுல்தான். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இசையமைப்பாளர் விவேக் மெர்வின் படத்திற்கு இசையமைத்துள்ளார். பின்னணி இசைமட்டும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் ஒரு சிறப்பான விர்சனத்தை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது இந்த திரைப்படம் வெளியான 5 நாட்களில் தமிழகத்தில் மட்டும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. ஆம் இந்த திரைப்படம் 5 நாட்களில் தமிழகத்தில் மட்டும் 18.19கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இதைபோல் நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான கைதி திரைப்படம் வெளியான 5 நாட்களில் தமிழகத்தில் மட்டும் 18.4 கோடி தான் வசூல் செய்திருந்தது என்பதை குறிப்பிடத்தக்கது.