நடிகர் சங்க அலுவலகத்தில் திடீர் தீ விபத்து.!

A number of important documents are said to have been burnt to ashes due to a sudden fire at the office of the Actors' Association

சென்னையில் இயங்கி வரும் நடிகர் சங்க அலுவலகத்தில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் முக்கிய ஆவணங்கள் பல எரிந்து சாம்பலாகியதாக கூறப்படுகிறது.

சென்னை தீ நகரில் உள்ள ஹபிபுல்லா சாலையில் அமைந்துள்ள நடிகர் சங்க அலுவலகத்தில் இன்று அதிகாலை 4 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது . சமையலறையில் இருந்து முதலில் பரவிய தீ அலுவலகம் முழுவதும் மளமளவென பரவியதாக கூறப்படுகிறது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு 2 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தேனாம்பேட்டை தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் .மேலும் இந்த தீ விபத்தில் பல முக்கிய ஆவணங்கள், கணிப்பொறிகள் உள்ளிட்டவைகள் எரிந்து சாம்பலாகியதாக கூறப்படுகிறது .தீ விபத்து ஏற்பட காரணம் மின்கசிவு தான் என்று கூறப்படுகிறது.

நடிகர் சங்க தேர்தலானது கடந்தாண்டு நடைபெற்றதும் , அதற்கான முடிவுகள் வழக்கு விசாரணையில் இருப்பதால் வெளிவராததும் குறிப்பிடத்தக்கது.எனவே நடிகர் சங்கமானது தற்போது தனி அலுவலர்களின் கட்டுப்பாட்டில் இயங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

unknown node