சிம்பு, யுவன் அந்த காலத்து மஞ்சும்மல் பாய்ஸ்! அடுத்த குண்டை தூக்கிப்போட்ட சுசித்ரா!
சென்னை : சிம்பு, யுவன் கொக்கைன் கல்ச்சரை கொண்டுவந்தாங்க என்று சுசித்ரா அடுத்த சர்ச்சையை கிளப்பி விட்டு இருக்கிறார்.
பிரபல பாடகியான சுசித்ரா வின் பெயர் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. ஏனென்றால், ஊடகங்களுக்கு கொடுக்கும் பேட்டிகளில் கலந்து கொண்டு பல சினிமா பிரபலங்களை பற்றி அதிர்ச்சியான தகவலை கூறி கொண்டு வருகிறார். தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், த்ரிஷா, கார்த்திக் குமார் என பலரை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சுசித்ரா சிம்பு, யுவன் சங்கர் ராஜா, வெங்கட் பிரபு உள்ளிட்ட பிரபலங்களை பற்றி பேசி மீண்டும் பரபரப்பை கிளப்பி இருக்கிறார். தனுஷிற்கு சிம்புவை பிடிக்காது. ஆனால், சிம்புவிற்கு விஷாலை பிடிக்காத்து இது தான் பலருக்கு தெரியும் ஆனால், ஒன்றாக இணைந்து தான் பார்டி செய்வார்கள்.
இங்கு போதை கலாசாரத்தை வெங்கட் பிரபு, சிம்பு, யுவன் சங்கர் ராஜா போன்ற பணக்கார வீட்டு பசங்கள் தான் கொண்டு வந்தார்கள். அவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் மஞ்சுமல் பாய்ஸ் போன்று இருந்தார்கள். பாடல்களை பாடுவதற்கு ஸ்டுடியோவிற்கு சென்று பார்த்தால் கூட போதைப்பொருட்கள் இருக்கும். இதெல்லாம் நான் அங்கு பார்க்கும்போது ரொம்பவே அதிர்ச்சியாக எனக்கு இருந்தது.
எனக்கு இதெல்லாம் சுத்தமாக பிடிக்கவே பிடிக்காது. பாடலை பாடுவதற்காக போகும்போது அதையெல்லாம் பார்த்தாலே கோபம் வரும்” என்று சுசித்ரா கூறியுள்ளார். வெங்கட் பிரபு, சிம்பு, யுவன் சங்கர் ராஜா பற்றி இவர் பேசி இருப்பது வைரலாகி வருகிறது. இதைப்போலவே முன்னதாக ஒரு பேட்டியில் கமல்ஹான் பிறந்த நாள் பார்ட்டி வைத்தால் அங்கு வெள்ளி தாம்பூலத்தில் கொக்கைன் வரும்” என்று பேசி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.