தொடர்ச்சியான மரணங்கள் அதிர்ச்சியைத் அளிக்கிறது – கே.வி.ஆனந்த மறைவுக்கு சிம்பு இரங்கல்..!

Actor Simbu has expressed his condolences on the death of director KV Anand on his Twitter page

இயக்குனர் கே.வி.ஆனந்த மறைவுக்கு நடிகர் சிம்பு  ட்வீட்டர் பக்கத்தில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

சமீப நாட்களாக திரையுலகில் பிரபலங்கள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்து வருவது திரையுலகை சற்று கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், பிரபல இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் சிலம்பரசன் தனது ட்வீட்டர் பக்கத்தில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அதில் ” தொடர்ச்சியான மரணங்கள் அதிர்ச்சியைத் தருகிறது. மரணம் எதிர்பாராத ஒன்றுதான் என்றாலும், நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பவர்களை, நம்மோடு தினமும் தொடர்பில் இருப்பவர்களை எதிர்பாராமல் இழப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதிர்ந்து பேசாத நல்ல மனிதர் கே வி ஆனந்த் அவர்கள். கோ படத்தில் நான் நடித்திருக்க வேண்டியது. அப்போதிருந்த சூழலில் தவிர்க்கும் படியாகிவிட்டது. சமீபத்தில் மிக அருமையான கதை ஒன்றை எனக்குச் சொல்லியிருந்தார். சேர்ந்து படம் பண்ணலாம் எனச் சொல்லியிருந்தேன்.

தினமும் என்னோடு தொடர்பிலிருந்தார். நேற்றுவரை பேசிக் கொண்டிருந்தவர் இன்று அதிகாலை மரணமடைந்துவிட்டார் என்று சொல்வதை மனம் நம்ப மறுக்கிறது. பொய்ச் செய்தியாக இருக்கக்கூடாதா என அங்கலாய்க்கிறேன். இவ்வளவு சீக்கிரம் அவரை இழந்திருப்பது மிகுந்த வருத்தத்திற்குரியது. ஒளிப்பதிவாளர்கள் இயக்குநராகி வெற்றி பெற்றவர்களில் கே வி ஆனந்த் அவர்கள் மிக முக்கியமானவர். நிச்சயம் பேசப்படும் நிறையப் படங்களை அவர் தொடர்ந்து தந்திருப்பார்.

அவசரமாகப் பயணித்துவிட்டார் இறைவனிடம். திரைத்துறைக்கு அவரின் மறைவு பேரிழப்பு. அவரை இழந்து நிற்கும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடவுளின் கரங்களில் இளைப்பாறட்டும் “ என்று தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

unknown node