நடிகர் விஜய் தற்போது “வாரிசு” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர்.
unknown nodeVarisuPongal [Image Source: Twitter ]
இந்த படத்திலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான ரஞ்சிதமே பாடல் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து படத்தின் ட்ரைலர் மற்றும் அடுத்த பாடல் வெளியாகும் தேதி குறித்த அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் காத்திருந்தனர்.
இதையும் படியுங்களேன்-படப்பிடிப்பில் தனுஷை அடித்த செல்வராகவன்… ! அதிர்ச்சி சம்பவத்தை கூறிய பிரபல இயக்குனர்…
இதனையடுத்து, படத்தின் இரண்டாவது பாடல் தீ தளபதி என தொடங்கும் பாடல் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் சூப்பரான அப்டேட்டை கொடுத்திருந்தது. இதனை தொடர்ந்து அந்த பாடலை பிரபல நடிகரான சிம்பு பாடியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
unknown nodeவாரிசு படக்குழுவுடன் சிம்பு எடுத்துக்கொண்ட அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுவரை சிம்பு பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். ஆனால் முதன் முறையாக விஜய்காக சிம்பு பாடியுள்ளதால் ரசிகர்கள் ஆவலுடன் பாடலை கேட்க காத்துள்ளனர்.
unknown node