இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம் , ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், பிரபு, சரத்குமார், போன்ற பல பிரபலங்கள் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன்”. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
unknown nodeஇரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைக்கா நிறுவனமும் இணைந்து இந்த படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
unknown nodeபடம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டும் இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணியில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. படத்தை பார்க்க ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், படம் தரமாக இருக்கவேண்டும் என்ற நோக்கில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது.
unknown nodeஇந்த நிலையில், படத்திலிருந்து ஏ.ஆர்.ரஹ்மானின் துல்லியமான பின்னணி இசையுடன் ஒரு புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பொன்னியின் செல்வன் படத்தின் புதிய அப்டேட் விரைவில் வெளியாகவுள்ளது என தெரிகிறது.
Get ready for an adventure filled week!
The Cholas are coming! #PS1 ???? @madrastalkies_ @LycaProductions #Maniratnam pic.twitter.com/bZm5BI54sD— A.R.Rahman (@arrahman) July 2, 2022