மோகன்லால் இயக்கும் படத்தில் களமிறங்கும் ஸ்பானிஷ் நடிகர்கள்!

நடிகர் மோகன்லால் பிரபலமான மலையாள நடிகராவார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் மலையாள திரைப்படங்களிலேயே

நடிகர் மோகன்லால் பிரபலமான மலையாள நடிகராவார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் மலையாள திரைப்படங்களிலேயே நடித்துள்ளார். இதுவரை இவர் 340-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் முதன்முதலாக இயக்குனராக உள்ளார். இவர் இயக்கும் படத்திற்கு பாரூஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படம் குழந்தைகளுக்கான 3 டி ஃபேண்டஸி படமாக அமையவுள்ளது. வாஸ்கொடகாமாவின் பொக்கிஷங்களை பாதுகாக்கும் ஒருவரை மையப்படுத்தி கதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் கதை 400 வருடத்துக்கு முன் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்தில், ஸ்பானிஷ் சினிமாவின் முக்கிய நடிகர்களான, பாழ் வேஹா, ரஃபேல் அமர்கோ ஆகியோர் நடிக்கவுள்ளனர்.மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு அக்டொபேர் மாதம் துவங்கவுள்ளது.

மோகன்லால் இயக்கும் படத்தில் களமிறங்கும் ஸ்பானிஷ் நடிகர்கள்!