தீபாவளிக்கு வெளியாகும் SK-வின் அயலான்.... செம மாஸ் அப்டேட்..!

Ayalon is a film starring Sivakarthikeyan It will be released on the coming Diwali day

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் படம் வருகின்ற தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் டாக்டர் மற்றும் அயலான். இதில் டாக்டர் திரைப்படம் வருகின்ற மார்ச் மாதம் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதனை தொடர்ந்து அயலான் படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் குழம்பி வந்த நிலையில் தற்போது அதறகான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. ஆம் அயலான் படம் வருகின்ற தீபாவளி தினத்தில் படக்குழுவினர் வெளியிடவுள்ளதாக  தகவல்கள் பரவி வருகிறது.

இந்த அயலான் படத்தை இயக்குனர் ரவிக்குமார் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் சிவகார்த்தி கேயனுடன் ரகுல் ப்ரீத்தி சிங்,யோகி பாபு மற்றும் கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். கே.ஜி.ஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் இஷா கோபிகர் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கான டப்பிங் பணிகள் நேற்று பூஜையுடன் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.