தள்ளிப்போகும் டாக்டர் படத்தின் ரிலீஸ்... சோகத்தில் SK ரசிகர்கள்..!

It is rumored that the release date of Sivakarthikeyan starrer 'Doctor' will be postponed.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி செல்லவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். இந்த படத்தில் சிவகார்திகேயனிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் யோகி பாபு ,வினய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்திலிருந்து வெளியான 3 பாடல்களும் பட்டையை கிளப்பி வருகிறது. நேற்று செல்லமா செல்லமா பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது.

இதனை தொடர்ந்து இந்த படத்திற்கான டிரைலர் இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படம் வருகின்ற 26 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், ஏப்ரல் 6-ம் தேதி தமிழகத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்ட சில படங்களின் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த டாக்டர் திரைப்படம் மே 12 ஆம் தேதி வெளியாக அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. மேலும் படத்திற்கான ரிலீஸ் தேதி தள்ளி செல்கிறதா அல்லது திட்டமிட்டபடி வருகின்ற 26 ஆம் தேதி வெளியாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்