தொகுப்பாளினியாக களமிறங்கும் சிவாங்கி.! எந்த நிகழ்ச்சியில் தெரியுமா.??

தொகுப்பாளினியாக விஜய் டிவியில் சிவாங்கி களமிறங்குகிறார்.

தொகுப்பாளினியாக விஜய் டிவியில் சிவாங்கி களமிறங்குகிறார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் சின்ன திரையில் அறிமுகமானவர் சிவாங்கி. இதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார்.

unknown node

இந்நிகழ்ச்சியின் கோமாளியாக கலந்த கொண்டு புகழ் அஷ்வினுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டி ரசிகர்களை வெகுவாக கவர செய்தது என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சியின் மூலம் சிவாங்கியும் பல படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

unknown node

குறித்த நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டான் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதை தவிர்த்து சில புதிய படங்களிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

unknown node

இதற்கிடையில், தற்போது சிவாங்கி தொகுப்பாளினியாக களமிறங்குகிறார். அதாவது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியை ரக்ஷன் மற்றும் பிரியங்கா இருவரும் இணைந்து தொகுத்து வழங்கி வந்த நிலையில், தற்போது பிரியங்காவிற்கு பதிலாக சிவாங்கி தொகுத்து வழங்க வந்துள்ளார்.