ரசிகர்களின் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. மண்டேலா படத்தை இயக்கிய மடோனா அஸ்வின் இயக்கத்தில், உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை அதிதிஷங்கர் நடித்துள்ளார். யோகிபாபு, மிஸ்கின், மோனிஷா, சரிதா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
முதலில் இன்று இரவு 7 மணிக்கு படத்தின் ட்ரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தொழிநுட்பக்கோளாறு காரணமாக 8 மணிக்கு வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. இதன்படி தற்போது ட்ரைலர் வெளியாகியுள்ளது. ட்ரெய்லரை பார்க்கையில் இந்த திரைப்படமும் சிவகார்த்திகேயனுக்கு ஒரு வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
unknown nodeட்ரெய்லரில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் காண்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது என்ற கூறலாம். அத்துடன் டிரைலரில் வரும் பின்னணி இசையும் காண்போரை வெகுவாகக் கவரும் வகையில் ட்ரைலர் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு மேலும் அதிகமாகியுள்ளதால், ஜூலை 14 ஆம் தேதியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
