சிவக்கார்த்திகேயனின் 'கனா' படம் செய்த சாதனை.!

சிவக்கார்த்திகேயனின் கனா படத்தின் இரண்டு பாடல்கள் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

சிவக்கார்த்திகேயனின் கனா படத்தின் இரண்டு பாடல்கள் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

கடந்த 2018ல் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக அறிமுகமாகி நடித்த திரைப்படம் ‘கனா’. கிரிக்கெட் பின்னணியையும், விவசாயிகளை குறித்தும் அழகாக சித்தரிக்கப்பட்டிருந்த இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பல பாராட்டுகளை பெற்றார். மேலும் இந்த படத்தில் தர்ஷன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். மேலும் திபு நினன் தாமஸ் இசையமைத்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது இந்த படம் தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை படைத்துள்ளது. இந்த படத்தில் உள்ள இரண்டு பாடல்கள் யூடுபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்த முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மகளான ஆராதானா பாடிய வாயாடி பெத்த புள்ள என்ற பாடல் 157மில்லியன் பார்வையாளர்களையும், அனிருத் அவர்கள் பாடிய ஒத்தயடி பாதையில என்ற பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களையும் பெற்று சாதனை படைத்துள்ளது.

unknown node