பாலிவுட்டில்சல்மான் கான்நடிப்பில் பெரிய வெற்றி பெற்ற திரைப்படம்தபாங்,மற்றும்தபாங் 2. தற்போது இந்த படத்தின் மூன்றாவது பாகமானதபாங் 3விறுவிறுப்பாக உருவாகியுள்ளது. இந்த படத்தைபிரபுதேவாஇயக்கி வருகிறார்.
unknown nodeஇந்த படம்டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த படம் ஹிந்தி மட்டுமின்றிதெலுங்கு, தமிழ்என மற்ற மொழிகளிலும்டப்செய்யப்பட்டு ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் தமிழ் டப்பிங், மற்றும் ஹிந்தி பாதிப்பை தமிழ்நாட்டில் திரையிடும் உரிமையைகே.ஜே.ஆர்பட நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இதேகே.ஜே.ஆர்.நிறுவனம் தான்சிவகார்த்திகேயன்நடித்து வரும்ஹீரோபடத்தையும் தயாரித்து வருகிறது. இந்த படமும்டிசம்பர் 20இல் வெளியாவது குறிப்பிடதக்கது.