மீண்டும் இயக்குனர் நெல்சனுடன் இணையும் சிவகார்த்திகேயன் ....!

It has been reported that actor Sivakarthikeyan is all set to co-star with director Nelson in a new film.

மீண்டும் நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் நெல்சனுடன் இணைந்து புதிய படமொன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் தற்போது பல்வேறு திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். இவரது திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கிய திரைப்படம் நேற்றுதான் வெளியாகியது.

இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கும் டான் எனும் படத்திலும் இவர் நடித்து வருகிறார். இதனிடையே சிவகார்த்திகேயன் அடுத்ததாக மீண்டும் இயக்குனர் நெல்சன் அவர்களின் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.