காமெடி கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து கலக்கி வந்த நடிகர் சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடுதலை’ படத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்கவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு இந்த படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
unknown nodeSoori Viduthalai [Image Source: Twitter ]
நடிகர் சூரி சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரிடம் நெருக்கமாக இருப்பார் என்பது அனைவர்க்கும் தெரியும். உரிமையுடன் வாடா போடா என்கிற அளவிற்கு இவர்களுக்குள் நட்பு இருக்கிறது. இதனால் சூரி பல பேட்டிகளில் அவர்கள் இருவரையும் பற்றி பெருமையாக பேசுவது உண்டு.
இதையும் படியுங்களேன்-ஆபாச படங்கள் பார்த்துள்ளீர்களா.? விஜே கேட்ட அந்த கேள்வி.! ‘லவ் டுடே’ நாயகியின் அசத்தல் பதில்..
unknown nodeSoori And Vijay sethupathi [Image Source: Twitter ]
அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் சூரி பேசியதாவது ” சிவகார்த்திகேயன் என் தம்பி மாதிரி. அதைபோல் விஜய் சேதுபதி எனக்கு மாமா மாதிரி. விஜய் சேதுபதி தான் எதார்த்தத்தோட உச்சம். அன்னைக்குப் பார்த்த மாதிரியே இன்னைக்கும் இருக்கார். நடிக்க வந்தபோது எப்படி இருந்தாரோ அதே போலத்தான் எளிமையாக இருக்கிறார்.
unknown nodeSoori And Vijay sethupathi [Image Source: Twitter ]
ஒரு நபர் பேசாமல் உட்கார்ந்திருந்தால் அவனுடைய மனதில் என்ன ஓடுகிறது என்பதை சொல்லிடுவார். எல்லோரையும் சமமா நடத்துவார். ‘நீ காமெடியன் மட்டுமில்லை மாமா… அதை ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கிறன்னு கேட்டுட்டே இருப்பார். ‘நீதான்டா விடுதலை படத்துல ஹீரோ. உன் படத்துல நான் நடிக்கிறது ரொம்ப சந்தோஷம்’னு மனப்பூர்வமா சொல்வார்” என விஜய் சேதுபதியை புகழ்ந்து தள்ளியுள்ளார் சூரி.