குழந்தைகளுக்கு பாலியல் விழிப்புணர்வு பாடமெடுக்கும் சிவகார்த்திகேயன்! யு-டியூபிலிருந்து வீடியோ நீக்கம்!!!
குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்துதலுக்கு எதிராக அதுபற்றிய விழிப்புணர்வு வீடியோ ஒன்றை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். அதில் பள்ளி குழந்தைகளுக்கு அவர் விழிப்புணர்வு பாடமெடுப்பதுபோல உருவாக்கப்பட்டிருந்தது.
அந்த வீடியோவில் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் என பாகுபாடு பிரித்து அதனை மீறுபவர்களை பெற்றோரிடமோ, அல்லது வீட்டு பெரியவர்களிடமோ,ஆசிரியரிடமோ கூறலாம் என சிவகார்த்திகேயன் அறிவுரை கூறுவது போல வீடியோ சித்தரிக்கப்பட்டிருந்தது.
பிறகு சில மணி நேரத்தில் இந்த வீடியோ யூ டியூப் இலிருந்து நீக்கப்பட்டுவிட்டது. காரணம் இன்னும் தெரியவில்லை. தொழில்நுட்ப காரணமா? அல்லது வேறு பிரச்சனையா என தெரியவில்லை.
DINASUVADU
https://twitter.com/Siva_Kartikeyan/status/1045274462294224896