ஆண் குழந்தைக்கு தாயானார் பாடகி ஸ்ரேயா கோஷல்..!

El popular cantante de reproducción Shreya Ghoshal ha dado a luz a un bebé hoy.

பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு இன்று ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பாடகி ஸ்ரேயா கோஷல் முதன்முதலாக தேவதாஸ் என்ற இந்தி திரைப்படத்தில் பின்னணி பாடகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழ், இந்தி, மலையாளம், என பல்வேறு மொழிகளில் தனது இனிமையான குரலால் படி தனக்கென்று பெரிய ரசிகர்கள் பட்டாளத்தே வைத்துள்ளார்.

இவரும் ஷிலாதித்யா என்பவரும் காதலித்து கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்தனர். இவர்களது திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடந்தது. மேலும் கடந்த மார்ச் 4 ஆம் தேதி கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் ” இன்று மதியம் கடவுளின் அருளால் எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுபோன்ற ஒரு மகிழ்ச்சியான உணர்வை இதற்கு முன்பு அடைந்ததில்லை. நான் எனது கணவர் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் அளவுகடந்த மகிழ்ச்சியில் இருக்கிறோம். உங்களது வாழ்த்துக்களுக்கு என்ற நன்றி ” என்று தெரிவித்துள்ளார்.

unknown node
ஆண் குழந்தைக்கு தாயானார் பாடகி ஸ்ரேயா கோஷல்..!