சிம்புவின் அடுத்த படம் போடா போடி 2...?

It has been reported that the second part of the 2012 film Boda Bodi directed by Vignesh Sivan and starring Simbu will be made.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த 2012ம் ஆண்டு வெளியான போடா போடி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக தகவல்.

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ஈஸ்வரன் திரைப்படம் வருகின்ற பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு அடுத்ததாக வெங்கெட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு அடுத்ததாக இயக்குனர் மிஷ்கின் இயக்கும்புதிய படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இயக்குனர் மிஷ்கின் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருவதால் சிம்புவின் படத்தை இயக்க வாய்ப்பில்லை என்பது தெரியவந்துள்ளது.

போடா போடி 2..?

unknown node

மாநாடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிம்பு நடிக்கும் திரைப்படத்தை பற்றி ஒரு தகவல் கிடைத்துள்ளது ஆம், கடந்த 2012ஆம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான போடா போடி திரைப்படம் ரசிகர் மத்தியில் எந்த அளவிற்கு வரவேற்பு பெற்றது என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

இந்த நிலையில், அடுத்ததாக இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை ரித்திகா பால் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.