மூன்றாவதாக படத்தினை இயக்கி தயாரிக்க ரெடியாகும் சிம்பு.! வில்லன் மாஸ்டர் பவானியா.?

It has been reported that actor Simbu will direct and act in his 50th film and Vijay Sethupathi will play the villain in the film.

நடிகர் சிம்பு தனது 50-வது படத்தினை அவரே இயக்கி நடிக்கவுள்ளதாகவும் , அந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் சிம்பு நடிப்பில் பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ஈஸ்வரன்.இந்த திரைப்படம்குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.அதனை தொடர்ந்து சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு எனும் படத்தில் நடித்து வருகிறார்.இதன் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதன் பின் மப்டி பட ரீமேக்கான பத்து தல படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார்.கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.அதனை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார்.இது அவர்களது கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படமென்பதும் ,அதனை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிம்பு தனது 50-வது படத்தினை அவரே இயக்கி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சிம்பு ஏற்கனவே மன்மதன் ,வல்லவன் ஆகிய படங்களை இயக்கி அது ரசிகர்களைடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் சிம்பு அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இவர்கள் இருவரும் ஏற்கனவே செக்க சிவந்த வானம் படத்தில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.இந்த தகவல் எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.