சென்னை :தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகர்களாக வலம் வந்த சித்தார்த்தும், அதிதி ராவும் தற்போது திருமணம் செய்துள்ளனர். இந்த திருமணம், மிகவும் சிம்பிளாக நடந்து முடிந்திருக்கிறது எனவும், அவர்களின் பாரம்பரிய முறைப்படியே இருவரும் திருமணம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
unknown nodeSiddarth – Aditi Rao Marriage Pic -1
இருவரும் இணைந்து எடுத்துள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் “ஜோடி பொருத்தம் அருமையாக உள்ளது’ என கூறி இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கடந்த 2021-ம் ஆண்டில் வெளியான மகா சமுத்திரம் என்ற படத்தில் இருவரும் இணைந்து ஒன்றாக நடித்தனர். அந்த படத்தில் நடித்து கொண்டிருக்கும் போதே இருவரும் ஒருவர் மீது ஒருவர் காதல் வயப்பட்டுள்ளனர்.
unknown nodeSiddarth – Aditi Rao Marriage Pic -2
இதனால், இருவரும் டேட்டிங்கில் இருந்து வந்தனர். மேலும், இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அதிதி-சித்தார்த்திற்கு இன்று பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. இந்த திருமணம் மிகவும் சிம்பிளாக அதிதியின் முன்னோர்கள் கட்டிய கோவிலில் நடந்ததாக கூறப்படுகிறது.
unknown nodeSiddarth – Aditi Rao Marriage Pic -3
சிம்பிளாக நடந்த இந்த திருமணத்தில் இருவரது உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் என வெகு சிலரே கலந்து கொண்டுள்ளனர். இந்த திருமணத்தில் இருவரும் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படங்களை இருவரும் அவர்களது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
unknown nodeSiddarth – Aditi Rao Marriage Pic -4
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “இருவரின் ஜோடி பொருத்தம் அருமையாக உள்ளது” எனவும் “இருவருக்கும் சுத்தி போட வேண்டும்” என்றெல்லாம் கமெண்ட் செய்து அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
unknown nodeSiddarth – Aditi Rao Marriage Pic -5
ரசிகர்களை தாண்டி தெலுங்கு நடிகர் நானி, மலையாள நடிகர் துல்கர் சல்மான், ஹன்சிகா மோத்வானி, மனிஷா கொய்ராலா போன்ற திரைபிரபலங்களும் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனால், இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
