தாத்தா கதறவிட போறாரு.. அதமட்டும் எழுதி வச்சுக்கோங்க! சித்தார்த் கலகல பேச்சு.!

சென்னை : இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள “இந்தியன் 2” படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது ஜூலை 12ஆம் தேதி பிரமாண்டமாக ரிலீஸ் செய்யத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் ட்ரைலர் இன்று (ஜூன் 25ஆம் தேதி) மாலை வெளியாக உள்ளது.
இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளனர். லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர், நடிகர்கள் சித்தார்த், பாபி சிம்ஹா, ஜெகன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த விழா மேடையில் பேசிய, “இயக்குனர் ஷங்கர் சார் 21 வருஷத்துக்கு முன்னாடி எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தார். தற்போது 21 வருஷத்துக்கு அப்புறமும் என்னை நம்பி, கமல் உடன் இந்தியன்2 படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்துள்ளார். அவருக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
இந்தியன் என்னுடைய பேவரைட் படம். எனக்கு கமல்ஹாசன் ஆக வேண்டும் என்பது தான் ஆசை. நான் ஷங்கர் சார் தயாரிப்பு, கமல் சாரின் மாணவன். இன்றைய காலகட்டத்திற்கு இப்படம் முக்கியமானது. “குறிச்சி வச்சிக்கோங்க, தாத்தா வராரு கதறவிட போறாரு. இப்படம் நிச்சயம் வரலாறு படைக்கும்”என கலகல வென பேசிருக்கிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றிருந்தது என்னுடைய கௌரவம்! பிரதமர் மோடி பதிவு!
February 24, 2025
NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..
February 24, 2025
தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?
February 24, 2025
தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? அறிக்கையில் ‘இதை’ கவனித்தீர்களா?
February 24, 2025