ஒரு காலகட்டத்தில் தமிழில் ஒரு கலக்கு கலக்கி வந்த ஸ்ரேயா சரண் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆண்ட்ரி கோஷீவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ராதா என்ற பெண்குழந்தை ஒன்றும் இருக்கிறது. ஆனால், ஸ்ரேயா கர்ப்பமாக இருக்கும்போது அதனை வெளியில் அறிவிக்கவேயில்லை. பிறகு திடீரென கடந்த 2021 ஆம் ஆண்டு தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
unknown nodeShriya Saran Family [Image Source: Twitter ]
இந்நிலையில், இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் எதற்காக கர்ப்பமாக இருந்ததை மறைத்ததற்ககான ரகசியத்தை கூறியுள்ளார். ” என் கர்ப்பத்தைப் பற்றி நான் பேசாமல் இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் என்னவென்றால், அந்த கர்ப்பகால சமயத்தை என் சொந்த நேரமாக மாற்றி, என்னுடன் நேரத்தை செலவிட விரும்பினேன். என் மகள் ராதாவுடன் 6 மாதங்கள் இருந்தேன். 6 மாதம் பருமனாகவும், என்னவாக இருந்தாலும், என்னைப் பற்றி சிலர் என்ன எழுதுகிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாமல், என் குழந்தை மீது கவனம் செலுத்தினேன்.
unknown nodeShriya Saran [Image Source: Twitter
மற்றொரு காரணம் என்னவென்றால், எனது கர்ப்பத்தைப் பற்றி நான் பேசினால் சினிமாவுக்கு வர நீண்ட காலம் ஆகியிருக்கும். இதனால் பட வாய்ப்புகள் கூட எனக்கு வந்திருக்காது. எனக்கு குழந்தை பிறந்தபோது அதை நான் அறிவிக்கும்போது சில திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகி இருதேன். அப்போது ராதா 9 மாத குழந்தையாக இருந்தால். திரைப்படங்களில் நடிப்பதற்காக என்னுடைய உடல் எடையை மிகவும் கஷ்டப்பட்டு குறைத்தேன்” என்று கூறியுள்ளார்.
இதையும் படியுங்களேன்-இந்த கவர்ச்சி போதுமா..? மஞ்சள் உடையில் மஜா போஸ் கொடுத்த ஜான்வி.! வைரலாகும் புகைப்படங்கள்..
unknown nodeShriya Saran [Image Source: Twitter ]
மேலும் ஸ்ரேயா சரண் கடைசியாக சஸ்பென்ஸ் த்ரில்லர் படமான த்ரிஷ்யம் 2 இல் நடித்தார். இந்த படம் படம் 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இன்னும் திரையரங்குகளில் ஓடிகொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.