பெயரே வைக்காமல் நிறைவடைந்த அருண் விஜய்யின் புதிய படத்தின் படப்பிடிப்பு!

Filming for the film starring Arunvijay and Regina Kesandra has been completed without placing the title for the film.

படத்திற்கான டைட்டில் வைக்கப்படாமல் அருண்விஜய் மற்றும் ரெஜினா கெஸன்ட்ரா நடித்துள்ள படத்திற்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

நடிகர் அருண் விஜயின் 31-வது படமாகிய புதிய படத்தை இயக்குனர் அறிவழகன் அவர்கள் இயக்கியுள்ளார். இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை ரெஜினா அவர்கள் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ராஜசேகர் அவர்கள் ஒளிப்பதிவு செய்துள்ளார். சம் சி எஸ் அவர்கள் இசை அமைத்துள்ளார். விஜய ராகவேந்திரா அவர்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் திரில்லர் படம் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்பொழுது நிறைவு செய்யப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்பொழுது வரையிலும் இந்த படத்திற்கான பெயர் என்ன என்பது அறிவிக்கப்படவில்லை, வைக்கப்படும் இல்லை என கூறப்படுகிறது. ஆனால் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

பெயரே வைக்காமல் நிறைவடைந்த அருண் விஜய்யின் புதிய படத்தின் படப்பிடிப்பு!