"படப்பிடிப்பு நன்றாக நடக்கிறது" சூர்யா 40 அப்டேட்...!!

Pandiraj has released a new poster saying that the shooting for Surya 40 is going well

சூர்யா 40 படத்திற்கான படப்பிடிப்பு சிறப்பாக நடந்து வருவதாக ஒரு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா சூரரைப்போற்று வெற்றியை தொடர்ந்து அடுத்தாக தனது 40 வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார். இசையமைப்பாளர் இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துவருகிறார். இந்த படத்தில் சத்யராஜ், சரண்யா, சூரி, தேவதர்ஷினி, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இந்த படத்திற்கான பூஜை கடந்த மாதம் நடந்தது. இந்த நிலையில் தற்போது இயக்குனர் பாண்டிராஜ் தனது ட்வீட்டர் பக்கத்தில் சூர்யா 40 படத்திற்கான படப்பிடிப்பு சிறப்பாக நடந்து வருவதாக ஒரு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். மேலும் சூர்யா படப்பிடிப்பில் இணைந்துள்ளதால்  தற்போது சூர்யா ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் உள்ளார்கள்.

unknown node