உள்ளே வராமலே இருந்திருக்கலாம்...கதறி அழுத தனலட்சுமி..! பிக்பாஸ் புரோமோ இதோ ..

பிக் பாஸ் 6-வது சீசன் நிகழ்ச்சி தொடங்கி இன்னும் ஒருவாரம் கூட ஆகாத நிலையில், பல சண்டைகள் வர தொடங்கிவிட்டது என்றே கூறலாம். அதன்படி, நேற்று தனலட்சுமி நீங்க

பிக் பாஸ் 6-வது சீசன் நிகழ்ச்சி தொடங்கி இன்னும் ஒருவாரம் கூட ஆகாத நிலையில், பல சண்டைகள் வர தொடங்கிவிட்டது என்றே கூறலாம். அதன்படி, நேற்று தனலட்சுமி நீங்க நடிக்கிறீங்க என ஜிபி முத்துவை பற்றி பேசினார். இதனால் சற்று கடுப்பான ஜிபி முத்து நீ என் பொண்ணு மாதிரி மரியாதையாக பேசு என கூறினார்.

பிறகு ஜிபி முத்து கண்கலங்கிய வீடியோவும் வெளியாகி சற்று பேசும்பொருளானது. பலரும் தனலட்சுமிக்கு எதிராகவும், ஜிபி முத்துக்கு ஆதரவாகும் கருத்துக்களை பதிவிட்டனர். இதனையடுத்து தற்போது இன்றயை நாளுக்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்த முதல் ப்ரோமோவில் ஜனனி தனலட்சுமியை ஸ்வாப்பிங் செய்கிறார். அதற்கு ஜனனி சொன்ன காரணம் என்னவென்றால், நேற்று ஜி.பி. முத்து கோபப்படும் போது தனலெட்சுமி பொறுமையாக இருந்திருக்கலாம் ஏனெனில் அவர் நம்மளுடைய அப்பா மாதிரி வயதில் பெரியவர் என்று கூறுகிறார்.

இதனால் சற்று மனமுடைந்த தனலட்சுமி விறு விறுவென்று வெளிய சென்று தனியாக அமர்ந்து கொண்டு நான் உள்ளே வராமலே இருந்திருக்கலாம் பிக் பாஸ் என்று கண்ணீர் விட்டு கதறுகிறார்.