பார்த்திபன் இயக்கி நடித்த ‘இரவின் நிழல்’ திரைப்படம் கடந்த ஜூலை மாதம் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. உலகின் முதல் நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தை பார்த்த அனைவரும் படம் அருமையாக இருப்பதாக பாசிட்டிவான கருத்துக்களை கூறினார்கள்.
unknown nodeIravinNizhal On Amazon Prime [Image Source: Twitter ]
எனவே, வசூல் ரீதியாகவும் படம் 22 கோடிக்கு மேல் வசூல் செய்து பல நாட்கள் திரையரங்குகளில் ஓடியது. படத்தில் பார்த்திபனுடன், வரலக்ஷ்மி சரத்குமார், பிரியங்கா ரூத், பிரிஜிடா சாகா, ஆனந்த கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
இதையும் படியுங்களேன்-இது என்கிட்ட இருக்குற கெட்ட பழக்கம்.. யாருக்கும் தெரியாம இத பண்ணுவேன்.! சீரியல் நடிகையின் அந்த செயல்.!
unknown nodeIravinNizhal On Amazon Prime [Image Source: Twitter ]
படத்தை திரையரங்கில் பார்க்காத ரசிகர்கள் எப்போது எந்த ஓடிடியில் வெளியாகும் என ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது படம் அமேசான் பிரேம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பார்த்திபன் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
unknown nodeIravinNizhal On Amazon Prime [Image Source: Twitter ]
இது தொடர்பாக அவர் ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பது ” மகிழ்ச்சியை கூட…அறிவித்து அனுபவிக்க முடியவில்லை. அமேசானில் ‘இரவின் நிழல்’ எனக்கேத் தெரியாமல்! தயவுசெஞ்சி நேரம் ஒதுக்கி முழுமையாய் பாருங்கள் (single shot)ஆதரவை தர வேண்டுகிறேன்! நன்றியுடன்” என்று பதிவிட்டுள்ளார்.
unknown node