ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘திட்டம் இரண்டு” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘திட்டம் இரண்டு’. சிக்ஸர் என்டர்டெயின்மென்ட் மற்றும் வினோத் குமாரின் மினி ஸ்டுடியோஸ் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளனர். படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
மான்ஸ்டர் மற்றும் மாஃபியா ஆகிய திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் சதீஷ் ரகுநாதன் இசையமைத்துள்ளார். திடுக்கிடும் மர்மங்கள் நிறைந்த திகில் படமாக இது உருவாகி உள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து ரிலீசாக தயாரிக்கியுள்ளது.
இந்த திரைப்படம் கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் திறக்காத காரணத்தால் படம் நேரடியாக சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. அந்த வகையில், ‘திட்டம் இரண்டு’ திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டு ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த திரைப்படம் வருகின்ற ஜூலை 30 ஆம் தேதி நேரடியாக சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
unknown node