சாணிக் காயிதம் மிரட்டல் லுக்கில் இருக்கும் இயக்குனர் செல்வராகவனின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் செல்வராகவன் கடைசியாக சூர்யாவின் என்ஜிகே படத்தினை இயக்கியிருந்தார். தற்போது இவர் ஹீரோவாகவும் சாணிக் காயிதம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்த படத்தில் செல்வராகவனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சாணிக் காயிதம் மிரட்டல் லுக்கில் இருக்கும் இயக்குனர் செல்வராகவனின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.
unknown nodeஇயக்குனர் செல்வராகவன் இந்த படத்தில் நடித்து முடித்துவிட்டு அடுத்ததாக நடிகர் தனுஷை வைத்து நானே வருவேன் என்ற படத்தை இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இந்த மாதம் 20 -ஆம் தேதி தொடங்கவுள்ளது. அதனை தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவர் 2 திரைப்படத்தை இயக்கவுள்ளார்.