5 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் செல்வராகவனின் 'நெஞ்சம் மறப்பதில்லை'.! ரிலீஸ் தேதி ரெடி.!

It has been reported that Selvaragavan's 'Nengsam Marappatillai' is all set to release in theaters in the first week of March.

செல்வராகவனின்’நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தினை மார்ச் மாதம் முதல் வாரத்தில் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் செல்வராகவன் கடைசியாக சூர்யாவின் என்ஜிகே படத்தினை இயக்கியிருந்தார்.தற்போது தனுஷின் இரு படங்களை இயக்கி வரும் இவரது இயக்கத்தில் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் திரைப்படம் தான் ‘நெஞ்சம் மறப்பதில்லை’.

திகில் கலந்த ஹாரர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் எஸ்ஜே சூர்யா, ரெஜினா கெசன்ட்ரா , நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் ஆகியவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.தற்போது 5 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது செல்வராகவனின்’நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தினை மார்ச் மாதம் முதல் வாரத்தில் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் செல்வராகவனின் 'நெஞ்சம் மறப்பதில்லை'.! ரிலீஸ் தேதி ரெடி.!